பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சோனிபட் பகுதியில் ஒரு தனியார் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவன் ஒரு இளம் காதலித்து வருகிறார். இவர் ஒரு ஆண்கள் விடுதியில் தங்கியுள்ள நிலையில் தன்னுடைய காதலியை அந்த விடுதிக்கு ஒரு சூட்கேசில் வைத்து அடைத்துக் கொண்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் அந்தப் பெண் திடீரென அலறியதால் உடனடியாக அங்கிருந்தவர்கள் ஓடிவந்து சூட்கேசை திறந்து பார்த்தபோது அந்தப் பெண் வெளியே வந்தார். இதைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்தப் பெண்ணும் வாலிபரும் சேர்ந்து திட்டமிட்டு தான் இந்த செயலை நிகழ்த்தியதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது.