மக்கள் தங்களுடைய வருமானத்தில் ஒரு சிறிய தொகையை சேமித்து வைத்து எதிர்காலத்தில் பணம் நெருக்கடி இல்லாமல் வாழ நினைக்கிறார்கள். அதற்கு நிறைய திட்டங்கள் இந்தியாவில் உள்ளது. குறிப்பாக தபால் நிலைய திட்டம் மக்களிடையே அதிகமான வரவேற்பு பெற்றுள்ளது.பல்வேறு வங்கி சேவைகளையும் வழங்கி வருகிறது. இது மட்டுமின்றி சில தபால் அலுவலக திட்டங்கள் வங்கிகளோடு ஒப்பிடும் போது அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது. தபால் அலுவலகத்தில் முதலீடு செய்வதன் மூலமாக ஒவ்வொரு மாதமும் பணம் சம்பாதிக்கலாம். அதன்படி தபால் அலுவலகத்தில் மாதாந்திர வருமான திட்டம் ஒரு சிறந்த திட்டம் .
இதில் மாதம் ஒருமுறை மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். ஒவ்வொரு மாதமும் மொத்த தொகையும் வட்டியும் உங்கள் கணக்கில் தொடர்ந்து வரும். குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதல் கணக்கு திறக்கப்படும். அதிகபட்சமாக ஒன்பது லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இந்த திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 15 லட்சம் வரை கூட்டுக்கணக்கில் டெபாசிட் செய்ய முடியும். ஒரு கூட்டுக்கணக்கில் அதிகபட்சம் மூன்று பேரை சேர்க்கலாம்.
இந்த திட்டத்திற்கு வருடம் தோறும் 7.4 சதவீதம் வட்டி கிடைக்கிறது. 5 வருடத்தோடு இந்த திட்டம் முடிவடைகிறது. இடையில் தேவைப்பட்டால் கணக்கை மூடிவிட்டு பணத்தை எடுக்கலாம். ஐந்து வருடங்கள் முடிந்த பிறகு டெபாசிட் செய்த முழு ஒன்பது லட்சம் பணமும் உங்கள் கணக்கிற்கு திரும்பும். இதனுடன் 5 வருடங்களில் 55,50 என்ற விதத்தில் மொத்தம் மூன்று லட்சத்து 33 ஆயிரம் வட்டி கிடைக்கும்.