நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய நிலையில் இன்று தான் நிறைவடைந்தது. இன்று நடைபெற்ற கூட்டத்தின் போது வைகோ மற்றும் நிர்மலா சீதாராமன் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. முன்னதாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்பு வாரிய சட்டதிட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதால் பரபரப்பான சூழலே நிலவியது. இந்நிலையில் திடீரென மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மற்றும் வைகோ இடையே பிரச்சனை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட போது அதன் மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது பாஜக கட்சியின் எம்.பி சுதான்ஷூ திரிவேதி முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என்று கூறினார். இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்த போதிலும் தொடர்ந்து அவர் பேசிக்கொண்டே இருந்தார். இது எம்பி வைகோவுக்கு கோபத்தை ஏற்படுத்திய நிலையில் அவர் எழுந்து நின்று தன்னுடைய ஆட்சேபனையை தெரிவித்தார். வைகோவுக்கு தமிழக எம்பிக்களும் ஆதரவு கொடுத்தனர். இதனால் அமளி ஏற்படும் சூழல் உருவானதால் இருக்கையை விட்டு எழுந்த நிர்மலா சீதாராமன் கொஞ்சம் பொறுங்க என்று தமிழில் கூறிவிட்டு அவர்களைப் பற்றி சபாநாயகரிடம் முறையிட்டார்.
இது பற்றி நிர்மலா சீதாராமன் கூறியதாவது, வைகோ எப்போது ஆவேசமாக பேசுபவர் தான். ஆனால் அதற்காக அவர் தற்போது பேசியதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர் நீ தமிழ்நாட்டில் கால்வை பார்க்கலாம். நீ தமிழ்நாட்டில் நுழைய கூட முடியாது. நீ எப்படி தமிழ்நாட்டிற்கு நுழைஞ்சிடுவேன் என்று நானும் பார்க்கிறேன் என்று கூறியுள்ளார். அவர் பேசியதை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று கூறினார். மேலும் சபாநாயகரும் அவருடைய பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்குவதாக உறுதியளித்தார்.