“சாப்பிட சப்பாத்தி தயார் செஞ்சுட்டேன்”… அம்மாவிடம் கூறிய அடுத்த நொடியே தூக்கில் தொங்கிய மகள்… பரபரப்பு பின்னணி…!!!
SeithiSolai Tamil April 05, 2025 02:48 AM

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் 18 வயதான இளம்பெண் ஒருவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இளம்பெண் ப்ரீத்தி குஷ்வாஹா(18). இவர் சம்பவநாளன்று இரவு வீட்டில் சப்பாத்தி தயாரித்து வைத்து விட்டதாக தனது அம்மாவிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். அவரது அம்மா சில மணி நேரத்தில் சென்று பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் ப்ரீத்தி கிடந்துள்ளார். இதனைக் கண்ட பிரீதியின் அம்மா அதிர்ச்சியில் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இந்த தகவலின்படி விரைந்து வந்த காவல்துறையினர் ப்ரீத்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின் நடத்திய விசாரணையில், ப்ரீத்தி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குடும்ப வருகையின் போது உறவினர் ஒருவரை சந்தித்து அவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இதனிடையே நெருங்கி பழகி வந்த இருவரும் ரகசிய திருமணம் செய்து உள்ளனர். இந்த திருமணம் குறித்த விஷயம் அவரது நண்பர்களின் மெசேஜ்கள் மற்றும் பரிமாறப்பட்ட புகைப்படங்கள் மூலமே தெரியவந்துள்ளது.

ப்ரீத்தி அந்த நபரை “ஹஸ்பண்ட் ஜி” என்று அழைத்து வந்துள்ளார். மேலும் திருமணத்திற்கு அடையாளமாக சிந்தூர் பூசிய புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. ஆனால் இந்த திருமணம் குறித்த சம்பவம் அவரது இறப்பிற்குப் பின்னரே அவரது குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. சமீபத்தில் ப்ரீத்தி தனது தலை முடியை முழுவதும் மொட்டை அடித்துக் கொள்வதற்கு இதுவே காரணம் என்றும் அவரது குடும்பத்தினர்கள் கூறியுள்ளனர்.

ப்ரீத்தி தனது மரணத்திற்கு முன் சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளதாகவும், ப்ரீத்தி திருமணம் செய்து கொண்ட நபர் சமீப காலமாக ப்ரீத்தியின் தொடர்பை துண்டித்து புறக்கணித்ததாக ப்ரீத்தியின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மார்ச் 13 முதல் மார்ச் 19ஆம் தேதிகளில் ப்ரீத்தி வெளியிட்ட சமூக ஊடக பதிவுகள் அவர் மன அழுத்தத்தில் இருந்ததை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.

இந்நிலையில் ப்ரீத்தி தற்கொலை செய்து கொள்வதற்கு முன் பீட்சா மற்றும் குளிர்பானங்கள் ஆர்டர் செய்துவிட்டு, தனது ரகசிய கணவருக்கு தொடர்ந்து தொலைபேசியில் அழைத்துள்ளார். ஆனால் அவர் எந்தவித பதிலும் தெரிவிக்காமல் இருந்ததும் ப்ரீத்தியின் செல்போனில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனை அடுத்து ப்ரீத்தியின் குடும்பத்தினர் ப்ரீத்தியின் மன உளைச்சலுக்கு காரணமான அந்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.