நாட்டின் வளர்ச்சியில் தமிழகத்திற்கு பெரும் பங்கு உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு 7 மடங்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு 3 மடங்கு அதிகமான நிதி வழங்கப்பட்டுள்ளது. இதெல்லாம் செய்த பிறகும், நிதி தரவில்லை என்று சிலர் அழுகிறார்கள். அவர்கள் அழுதுகொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு அழுவதற்கு மட்டுமே தெரியும், அழுது விட்டு போகட்டும். மத்திய அரசின் நிதி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியுள்ளது. திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசை விட தமிழ்நாட்டுக்கு அதிக நிதி தந்துள்ளோம். தமிழ்நாட்டின் கட்டமைப்பே மத்திய அரசின் முதன்மை நோக்கம்.
ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில், மருத்துவப் படிப்பின் பாடத்திட்டத்தைத் தமிழில் வழங்க வேண்டும். தமிழகத்தில் ஏழை மக்களுக்காக 12 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. 10 ஆண்டுகளில் 4 கோடிக்கும் அதிகமானோருக்கு கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஒரு கோடிக்கும் மேலான குடும்பங்களுக்கு குழாய் வழியே குடிநீர் வழங்கப்பட்டுள்ளது” என பேசியுள்ளார்.