ஒரு பெண் பங்கீ டிராம்போலின் என்ற கயிறகட்டி குதிக்கும் விளையாட்டில் கலந்துகொண்ட போது நடந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாரம்பரிய இந்திய உடையில் உள்ள அந்த பெண், பயணத்தை ஆரம்பிக்க தயார் நிலையில் இருந்தார். பயிற்சியாளர் கயிற்றை இழுக்க முயற்சித்தார். ஆனால் அது சிக்கிக் கொண்டது. பல முயற்சிகளுக்குப் பிறகு, கயிறு விடப்பட்டது, உடனே அந்த பெண் வானத்தை தொடும் அளவிற்கு உயரத்தில் சென்றார்.
அந்த உயரத்துக்கு சென்றதும், வீடியோ எடுத்தவர் கூட அதற்கான காட்சியை பதிவு செய்யத் தயாராக இல்லை. எனவே, அந்த காட்சி காணொளியில் இல்லை. பிறகு சில விநாடிகளுக்குள் அவர் மீண்டும் கீழே இறங்கும் போது வீடியோவில் தெரிகிறார். அவர் கீழே வரும்போது, தானாகவே சில சுழற்சிகளை எடுத்ததைக் காண முடிகிறது. இந்த காட்சி பார்த்த அனைவருக்கும் மகிழ்ச்சியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவைக் சமூக ஊடக பயனர் ஹேம்லதா மீனா, X தளத்தில் பதிவிட்டுள்ளார். ஒரே சில மணி நேரங்களில் 1.79 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. அவருடைய பதிவு “இதை வாழ்க்கையில் மீண்டும் அவர் ஒருபோதும் செய்யமாட்டார்” என்ற தலைப்புடன் வெளியாகியுள்ளது. இது பார்வையாளர்களிடையே பெரும் சிரிப்பையும் கவனத்தையும் பெற்றுள்ளது.