“எனர்ஜி ட்ரிங்கில் செய்யப்பட்ட முட்டை பொரியல்”… ரோட்டு கடையில் இப்படி ஒரு உணவா..? இணையத்தை கலக்கும் வீடியோ..!!!
SeithiSolai Tamil April 07, 2025 01:48 AM

ரோட்டு கடை உணவுகள் என்றாலே உணவுப் பிரியர்களுக்கு அலாதி விருப்பம். தற்போது சமூக வலைதளங்களில் வித்தியாசமான உணவுகளை சுவைப்பது போன்ற வீடியோ வெளியிடுவது அதிகமாகி வருகிறது.

இதேபோன்று கொல்கத்தாவில் உள்ள ஒரு கடைவீதி உணவு கடையில் வித்தியாசமான முறையில் தயார் செய்யப்படும் உணவு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் வியாபாரி ஒருவர் மான்ஸ்டர் எனர்ஜி ட்ரிங்க்கை கலந்து அதில் முட்டையை உடைத்து, மிளகாய் போன்றவற்றைக் கலந்து வேக வைக்கிறார்.

 

View this post on Instagram

 

அதன்பின் மீதமுள்ள பானத்தையும் கலந்து ஒரு இலையில் வைத்து பரிமாறும் வீடியோ சமூக வலைதளங்களில் கிட்டத்தட்ட 2 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து உள்ளது.

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து பலரும் இந்த வீடியோவிற்கு கடும் விமர்சனங்களையும்,எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர். இந்த வகை உணவுகள் உடல் ஆரோக்கியம் குறித்த கேள்வியை பொதுமக்களிடையே எழுப்பி உள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.