இராமநவமி என்பது விஷ்ணுவின் ஏழாவது அவதாரமாக கருதப்படும் ராமரின் பிறந்த நாளை கொண்டாடும் ஒரு பண்டிகையாகும். இந்நிலையில் இன்று ராமநவமி தின விழாவை பக்தர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
இதனை முன்னிட்டு ஆந்திர மாநிலத்தில் உள்ள குப்பம் பகுதியை சேர்ந்த இளைஞர் புருஷோத்தமன் என்பவர் வாழை இலையில் அயோத்தி பாலராமர் உருவத்தை வரைந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
அவரின் ஓவியத் திறன் சமூக வலைதளங்களில் வைரலாகி பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவர் புளியங்கொட்டையில் அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள் உருவப் படங்களை வரையும் திறன் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.