“விவசாய தோட்டத்தில் வேலை”… திடீரென கிணற்றுக்குள் கவிழ்ந்த டிராக்டர்… 7 பெண்கள் பலி… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!
SeithiSolai Tamil April 07, 2025 06:48 AM

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கஞ்ச் பகுதியில் நேற்று முன்தினம் காலை விவசாய வேலைக்காக 10 பேர் சென்றனர். அதன்படி 9 பெண்கள் உட்பட 10 பேர் ஒரு டிராக்டரில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் ஆல்ஹொன் கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்திற்கு வேலைக்காக சென்ற நிலையில் விவசாய பகுதிக்குள் டிராக்டரை அவர் ஓட்டி சென்றார்.

அப்போது ஒரு கிணற்றின் அருகே ஒரு டிராக்டர் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் கவிழ்ந்தது. இந்த விபத்து ஏற்படுவதற்கு முன்பாகவே ஓட்டுனர் கீழே குதித்து உயிர் பிழைத்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து 2 பெண்கள் உட்பட மூவரை உயிருடன் மீட்டனர். ஆனால் 7 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என்று முதல்வர் தேவேந்திர பாட்னாவிஸ் பாதுகாப்பு அறிவித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.