செங்கல்பட்டில் பல்கலைக்கழக மாணவியை கர்ப்பமாக்கிய பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் ராஜேஷ்குமார். இவர் அந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவருடன் நெருங்கி பழகியதுடன், ஆசை வார்த்தைகளை கூறி அவரை கர்ப்பமாக்கியுள்ளார்.
ஆனால் அவரை திருமணம் செய்து கொள்ளாமல் சில மாதங்கள் முன்பாக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில்தான் மாணவி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அவரை படூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பிற்காக அவர் அனுமதித்துள்ளார். அங்கு மாணவியின் உடல்நிலை மோசமானதையடுத்து ராஜேஷ்குமார் ஓடிவிட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிய வர மாணவியிடம் விசாரித்ததில் அவர் நடந்ததை கூறியுள்ளார், அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் ராஜேஷ்குமாரை கைது செய்துள்ளனர்.
Edit by Prasanth.K