இந்தியாவில் உள்ள ஒரு மைதானத்தில் நேற்று முன்தினம் ஒரு உள்ளூர் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் போது திடீரென வீரர்கள் மைதானத்தில் வைத்து பாங்க்ரா நடனம் ஆடினர். இது தொடர்பாக வைரலான வீடியோவில் பேட்ஸ்மேன் பந்தை அடித்துவிட்டு சிங்கிளாக ரன் எடுக்க ஓடுகிறார். ஆனால் அதனை பவுலர் பிடிக்காமல் தவறவிட்டார்.
இதன் காரணமாக பேட்ஸ்மேன்கள் மற்றொரு ரன் எடுக்க முயற்சித்தனர். ஆனால் மற்றொரு ஃபில்டர் அதற்குள் பந்தை எடுத்து வீசிவிட்டார். விக்கெட் கீப்பர் முனையில் இருந்த பேட்ஸ்மேன் வேகமாக ஓடி வருவதற்குள் எதிர்முனை பேட்ஸ்மேன் கிரீசுக்குள் சென்று விட்டார். இதன் காரணமாக ரன் அவுட் வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் ரன் அவுட் செய்வதற்கு முன்பாகவே விக்கெட் கீப்பர் பஞ்சாப் மாநிலத்தில் புகழ்பெற்ற நடனமாக இருக்கும் பாங்க்ரா நடனம் ஆடினார். அதனைப் பார்த்த சக வீரர்களும் நடனமாடினர். இந்த நடனத்திற்கு பிறகு தான் விக்கெட் கீப்பர் ரன் அவுட் என அறிவிக்கப்பட்டது. மேலும் இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பேசும் பொருளாக மாறி உள்ளது.