அஜித் குமார் டூ நல்லி குப்புசாமி , செஃப் தாமு வரை.. 2025 ஆண்டிற்கான பத்ம விருதுகளை அள்ளிய தமிழ்நாட்டு பிரபலங்கள்!
ET Tamil April 29, 2025 02:48 PM
திங்கள்கிழமை (ஏப்ரல் 28) புதுதில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர் அஜித் குமார், இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம பூஷண் விருதை பெற்றார். மத்திய அரசு அறிவித்த 19 பத்ம பூஷண் விருது பெற்றவர்களில் அவரும் ஒருவர். அஜித் குமார் மட்டுமின்றி செஃப் தாமு, நல்லி குப்புசாமி உட்பட தமிழ்நாட்டைச் சேர்ந்த பல முக்கிய பிரபலங்கள் இந்த விருதுகளைப் பெற்றுள்ளனர். இந்த விருதுகள் ஜனவரு 26, 2025 அன்று அறிவிக்கப்பட்டு, ஏப்ரல் 29, 2025 அன்று ராஷ்ட்ரபதி பவனில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களால் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் பத்ம பூஷண் (Padma Bhushan) பெற்றவர்கள்! 1. அஜித் குமார் (Ajith Kumar) – கலை பிரிவுதமிழ் திரைப்பட நடிகர் அஜித் குமார், திரைப்படக் களத்தில் தனது சிறப்பான பங்களிப்புக்காக பத்ம பூஷண் விருது பெற்றுள்ளார். இது அவருடைய சினிமா வாழ்க்கையில் ஒரு முக்கியமான அங்கீகாரம் ஆகும். 2. நல்லி குப்புசாமி செட்டி (Nalli Kuppuswami Chetti) – வர்த்தகம் மற்றும் தொழில்பிரபல தொழிலதிபர் மற்றும் நல்லி சில்க்ஸ் நிறுவனத்தின் தலைவர், நல்லி குப்புசாமி செட்டி அவர்கள், இந்தியாவின் ஹேண்ட்லூம் துறையில் தனது பங்களிப்புக்காக பத்ம பூஷண் விருது பெற்றுள்ளார். 3. ஷோபனா சந்திரகுமார் (Shobana Chandrakumar) – கலை பிரிவுபிரபல பாரதநாட்டியம் நடனக் கலைஞர் மற்றும் நடிகை, ஷோபனா அவர்கள், நடனக் கலை மற்றும் திரைப்படத் துறையில் தனது பங்களிப்புக்காக பத்ம பூஷண் விருது பெற்றுள்ளார். தமிழ்நாட்டில் பத்ம ஸ்ரீ (Padma Shri) பெற்றவர்கள் 1. கே. தாமோதரன் (K. Damodaran) – சமையல் கலைசமையல் கலைத்துறையில் தனது சிறப்பான பங்களிப்புக்காக, கே. தாமோதரன் அவர்கள் பத்ம ஸ்ரீ விருது பெற்றுள்ளார். 2. லக்ஷ்மிபதி ராமசுப்பையர் (Lakshmipathy Ramasubbaiyer) – இலக்கியம் மற்றும் கல்வி - பத்திரிகையியல்பத்திரிகையியல் துறையில் தனது பங்களிப்புக்காக, லக்ஷ்மிபதி ராமசுப்பையர் அவர்கள் பத்ம ஸ்ரீ விருது பெற்றுள்ளார்.
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.