உன் ஐடியாவைக் காரித் துப்பிடுவாங்க… பாலசந்தர் பேச்சைக் கேட்டு மாறிய கமல்!
CineReporters Tamil April 30, 2025 05:48 PM

Kamal: கமல்ஹாசன் சினிமாடிக் ஜர்னி என்ற புத்தகத்தை எழுத்தாளரும் இயக்குனருமான ஹரிஹரன் எழுதியுள்ளார். இவர் கமலைப் பற்றி பல சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

உத்தமவில்லன், விஸ்வரூபம், தசாவதாரம் ஆகிய படங்களில் என்ன ஒற்றுமைன்னா அவருடைய முகத்தை மாற்றிக்கிட்டே இருக்கணும். எதுக்கு இப்படி அவரு மாற்றிக்கிட்டே இருக்காருன்னு கேட்கலாம். அதுல என்ன இருக்குன்னா அவரு சினிமாவுல இறங்குனதே பாலசந்தர் சாருக்கிட்ட டைரக்ஷன் கத்துக்கறதுக்குத் தான். அவருக்கு ஆக்டிங்கே பிடிக்காது. முதல்ல சின்ன சின்ன ரோல்ல தான் நடிச்சாரு.

முதல்ல டைரக்ட் பண்றேன்னுதான் பாலசந்தர் சாருக்கிட்ட நீ படம் பண்ணாத. உன்னோட ஐடியா எல்லாம் ரொம்ப வித்தியாசமானது. அது மக்களுக்குப் புரியாது. விநியோகஸ்தருக்கு சுத்தமா புரியாது. அவங்க காரித் துப்பிடுவாங்க. ஆனா உன்னோட முகம் கண்டிப்பா மக்களுக்குப் பிடிக்கும்.

அது நிச்சயமா அவங்களைக் கவரும். அதனால நடின்னு சொன்னாராம். அதனால நான் ஒவ்வொரு படத்துக்கும் வேறு வேறு முகத்தை வச்சிக்கலாமான்னு கேட்டார். அப்போ தான் எனக்குப் பிடிக்கும்னு சொன்னார். அதுக்கு சரின்னு சொல்ல படத்துக்குப் படம் வேற வேற முகத்தைக் காட்டினார் என்கிறார் ஹரிஹரன்.

அடுத்த 10 வருஷத்துல ரொமான்ஸ விடுங்க. ஹீரோவே இருக்க மாட்டான். எல்லாமே ஏஐல தான் வரும். ஏஐல கமல்தான் முதல்ல படம் பண்ணப் போறாரு. ஏன்னா அவரு இதுக்காக ஒரு மாசம் அமெரிக்காவுல தங்கி படிச்சிருக்காரு. அவருதான் முதல்ல ஏஐல படம் பண்ணி உலகம் முழுக்க காட்டப் போறாரு என்கிறார் எழுத்தாளரும் இயக்குனருமான ஹரிஹரன்.

கமலின் கனவுப்படமான மருதநாயகம் சில பொருளாதார சிக்கல்களால் ஆரம்பித்த சில நாள்களில் டிராப் ஆனது. அதைத் தொடர வேண்டுமானால் வெறும் பொருளாதாரம் மட்டும் பத்தாது. இப்போது அவரது உடல் ஒத்துழைக்காது. அதனால் இந்தப் படத்தை ஏஐ டெக்னாலஜியில் இயக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. அதற்காகத்தான் அமெரிக்காவில் சென்று அதைப் படித்தார் என்றும் சொல்கிறார்கள்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.