முப்படைகளுக்கும் முழு சுதந்திரம்.. புகுந்து விளையாடுங்கள்: பிரதமர் மோடி அறிவிப்பு..!
WEBDUNIA TAMIL April 30, 2025 05:48 PM

பெஹல்காம் தாக்குதல் காரணமாக பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒட்டுமொத்த இந்தியாவே கோரிக்கை விடுத்து வரும் நிலையில், முப்படைகளுக்கு முழு சுதந்திரம் அளிப்பதாகவும், சரியான இலக்குகளை சரியான நேரத்தில் தேர்வு செய்து நடவடிக்கை எடுக்கலாம் என்றும் பிரதமர் மோடி அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி தருவது தொடர்பான முடிவுகளை மேற்கொள்ள’, முப்படை அதிகாரிகளுடன் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியபோது, பெஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி தருவது தொடர்பான முடிவுகளை முப்படைகளில் உள்ள அதிகாரிகள் எடுக்கலாம் என்றும் அவர்களுக்கு முழு சுதந்திரம் தருவதாகவும்’ பிரதமர் மோடி பேசினார்.

மேலும், ‘தீவிரவாதிகளின் இலக்குகள், அவர்களை தாக்க வேண்டிய சரியான நேரம் ஆகியவற்றை முப்படை தளபதிகள் முடிவு செய்யலாம்’ என்று பிரதமர் கூறியதை அடுத்து, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது மிக விரைவில் தாக்குதல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முப்படை அதிகாரிகள் இது குறித்து சரியான நேரத்தில் நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறப்படுவதால், எந்த நேரத்திலும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தலாம் என்று கூறப்படுகிறது.

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.