ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரின் ஆட்டம் தனி ரகமாக இருந்து வருகிறது. கடந்த 18 ஆண்டுகளாக ஐபிஎல் விளையாடி வரும் ஆர்சிபி அணி இதுவரை ஒருமுறைக் கூட கோப்பை வெல்லாத நிலையில், இந்த முறை தொடர் வெற்றிகளை குவித்து புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
இதனால் ஆர்சிபி அணி இந்த முறை கோப்பையை வெல்வது உறுதி என உற்சாகமாக காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.
இந்நிலையில் அணியின் வெற்றிக்காக ஆர்சிபி அணி கேப்டன் ரஜத் படிதார் திருப்பதியில் ஏழுமலையானை தரிசித்துள்ளார். அவருடன் ஜிதேஷ் சர்மா, ஆர்சிபி மகளிர் அணி வீராங்கனை ஷ்ரெயங்கா பாட்டில் ஆகியோரும் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.