அரசு பேருந்து மோதி இளம்பெண் பலி... கணவரின் சிகிச்சைக்காக சென்ற போது சோகம்!
Dinamaalai May 16, 2025 12:48 AM

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், திருவனந்தபுரம் தம்பானூர் பேருந்து நிலையத்தில் பரபெட் சுவருக்கும், அரசு பேருந்துக்கும் இடையில் சிக்கி படுகாயம் அடைந்த நிலையில் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தை சேர்ந்தவர் முஹம்மது ரஃபிக். இவரின் மனைவி நபீசத். நபீசத்  நேற்று திருவனந்தபுரத்தில், அரசு பேருந்தில் இருந்து இறங்கி வெளியே செல்ல முயற்சி செய்தபோது, இன்னொரு பேருந்து அருகில் வருவதை பார்த்து பரபெட் சுவர் அருகே ஒதுங்கி நின்றார். ஆனால் அந்த பேருந்து நெருக்கமாக வந்ததால், அவர் சுவருக்கும் பேருந்துக்கும் இடையில் நசுங்கி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

நபீசத்தின் கணவர் புற்றுநோய் நோயாளி. அவரது கீமோதெரபி சிகிச்சைக்கான மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்க திருவனந்தபுரத்திற்கு சென்றிருந்தார். 

இது குறித்து வழக்குப்பதிவு செய்து தம்பானூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நபீசத்தின் உடல் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவருக்கு அப்சல், ஷஹினா மற்றும் ஃபாசில் என்ற 3 குழந்தைகள் உள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.