“வீட்டின் மாடியில் இருந்து மனைவியை தலைகீழாக தொங்கவிட்டு டார்ச்சர் செய்த கணவன்”…. கதறி அழுதும் விடல… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!!
SeithiSolai Tamil May 17, 2025 05:48 PM

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி மாவட்டத்தில் ஆம்லா நகர் பகுதியில் நிதின்சிங் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பாக டோலி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணமான நாளிலிருந்து தன்னுடைய மனைவியை கணவனும் அவரது குடும்பத்தினரும் அடிக்கடி துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது கணவர் டோலியை தற்போது வீட்டின் மாடியில் இருந்து அதாவது சுமார் 12 அடி உயரத்திலிருந்து தலைகீழாக தொங்கவிட்டு துன்புறுத்தியுள்ளார். அந்தப் பெண் தன்னை விட்டு விடும்படி கதறி அழுத நிலையிலும் கணவர் இறக்கமே இல்லாமல் அந்த பெண்ணை தொங்கவிட்டு டார்ச்சர் செய்த நிலையில் உடனடியாக அருகில் இருந்தவர்கள் வந்து பெண்ணை மீட்க முயன்றனர்.

 

இருப்பினும் அவர் கேட்கவில்லை. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக டோலியின் சகோதரர் ரகுநாத் சிங் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி காவல்துறையினர் நிதின் சிங், அவரது சகோதரர் அமித் சிங், இவரது மனைவி மற்றும் தாயார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது டோலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.