“என் அப்பாவை விட்டுருங்க”… கதறி அழுத 7 வயது மகள் கண்முன்னே கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து அடித்தே கொன்ற கொடூர மனைவி… பரபரப்பு சம்பவம்…!!!
SeithiSolai Tamil May 17, 2025 05:48 PM

பஞ்சாப் மாநிலத்தின் கன்னா மாவட்டம் சோஹியான் கிராமத்தில் நடந்த கொடூரமான சம்பவம், உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் பரபரப்பை ஏற்படுத்திய சௌரப் கொலை வழக்கை நினைவூட்டுகிறது. இங்கு, 40 வயதான பகதூர் சிங் என்ற நபர், தனது மனைவி ஜஸ்வீர் கவுர் மற்றும் அவரது காதலன் சுக்ப்ரீத் சிங் ஆகியோரால் இரும்புக் கம்பியால் தலையில் தாக்கி படுகொலை செய்யப்பட்டார். சம்பவம் கடந்த புதன்கிழமை நள்ளிரவில் நடைபெற்றது.

இது பற்றி வெளியான தகவலின் படி பகதூர் சிங் கூலி வேலை செய்து வந்துள்ள நிலையில் இவருடன் சுக்ப்ரீத் சிங் என்பவரும் வேலை பார்த்துள்ளார். இவருடன் பகதூரின் மனைவி ஜஸ்வீர் கவுருக்கு பழக்கம் ஏற்படவே நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் கணவருக்கு தெரிய வரவே தங்களுடைய 7 வயது மகளின் எதிர்காலத்தை கருதி கள்ளத்தொடர்பை கைவிடுமாறு பலமுறை கூறியுள்ளார். இதன் காரணமாக அவரது மனைவி தன் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொல்ல திட்டமிட்டார். அதன் படி கடந்த புதன்கிழமை இரவு தன் கணவன் தூங்கிக் கொண்டிருந்த போது கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்து இரும்பு கம்பியால் இருவரும் சேர்ந்து அவரை கொடூரமாக அடித்து கொலை செய்துள்ளனர்.

என் அப்பாவை விட்டு விடுங்கள் என அவர்களின் மகள் கதறி அழுத நிலையில் இருவரும் இரக்கமே இல்லாமல் அவரை அடித்து கொலை செய்தனர். அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்ட நிலையில் அக்கம் பக்கத்தினர் உடனடியாக பகதூரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையிலும் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய இருவரையும் தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.