தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக விளங்கி வரும் சூரி ‘மாமன்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் நேற்று வெளியானது. இந்நிலையில் திரைப்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சூரி தனது திரைப்பட வெற்றிக்காக மண் சோறு தின்ற ரசிகர்களை பகிரங்கமாக சாடினார். இதற்கு கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, திரைக்கலைஞர் தம்பி சூரியைப் பாராட்டுகிறேன். தனது திரைப்பட வெற்றிக்காக மண்சோறு தின்ற ரசிகர்களைப் பகிரங்கமாகச் சாடியிருக்கிறார். மண்ணிலிருந்து தானியம் வரும்; தானியம் சோறாகும். ஆனால், மண்ணே சோறாக முடியாது. இந்த அடிப்படைப் பகுத்தறிவு இல்லாதவர்கள் தன் ரசிகர்களாக இருக்கமுடியாது என்று சொல்வதற்குத் துணிச்சல் வேண்டும்.
கதாநாயகர்கள் ஒவ்வொருவரும் தங்கள் ரசிகர் கூட்டத்தை இப்படி நெறிப்படுத்தி வைத்திருந்தால் கலையும் கலாசாரமும் மேலும் மேலும் மேம்பட்டிருக்கும். மண்சோறு தின்றால் ஓடாது மக்களுக்குப் பிடித்தால் மாமன் ஓடும். பகுத்தறிவு காத்திருக்கும் சூரியை ‘பலே பாண்டியா’
என்று பாராட்டுகிறேன் என்று பதிவிட்டுட்டிருந்தார்.