“சிகரெட் வேணும்”… பணம் கொடுத்தால் தான் தருவேன்.. கடைக்காரரை ரவுண்டு கட்டிய வாலிபர்கள்… 15 முறை துப்பாக்கியால்… பரபரப்பு வீடியோ..!!
SeithiSolai Tamil May 18, 2025 01:48 PM

மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியர் மாவட்டத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்து வரும் நிலையில், சமீபத்தில் ஒரு மளிகைக் கடையில் சிகரெட்டுக்காக 15 ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மகாராஜ்புரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில், குற்றவாளிகள் கடனுக்கு சிகரெட் கொடுக்க மறுத்த மளிகைக் கடைக்காரரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

இது குறித்து போலீசாரின் தகவலின்படி, கடைக்காரர் சுர்ஜித் மாவாய் என்பவர் சிலர் சிகரெட் கேட்டு வந்தபோது, கடனுக்கு தர மறுத்துள்ளார். இதையடுத்து, ஒரு வாலிபரும் அவரது தோழர்களும் சேர்ந்து கோபத்தில் சுர்ஜித்தை 15 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக இதில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 

மேலும் இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் குற்றவாளிகளை கைது செய்யும் பணிகளை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.