உங்கள் மனம் காயப்பட்டிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்… செல்லூர் ராஜு வருத்தம்.. வைரலாகும் பதிவு…!!!
SeithiSolai Tamil May 18, 2025 05:48 PM

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இந்தியா பாகிஸ்தான் மோதலின் போது ராணுவ வீரர்கள் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது ராணுவ வீரர்கள் என்ன எல்லைக்கு போய் சண்டையா போட்டார்கள். மோதலின் போது பிரதமர் மோடி தான் இரவு பகல் தூங்காமல் கண் விழித்து கண்காணித்ததாகவும் மத்திய அரசு ராணுவ வீரர்களுக்கு தேவையான ஆயுதங்களை அனைத்தும் வாங்கி கொடுத்தது என்றும் கூறினார்.

இதில் ராணுவ வீரர்கள் பற்றி செல்லூர் ராஜு பேசியது சர்ச்சையாக மாறிய நிலையில் அவருக்கு பல தரப்பிலும் கண்டனங்கள் குவிந்தது. இதனால் ஏற்கனவே செல்லூர் ராஜு தன்னுடைய பேச்சுக்கு விளக்கம் கொடுத்த நிலையில் தற்போது மீண்டும் இதற்காக மன்னிப்பு கேட்டு ஒரு எக்ஸ் தள பதிவை வெளியிட்டுள்ளார்.

 

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய நாட்டை கண் இமை காப்பது போல் பாதுகாத்து வரும் என்னுடைய உயிரினும் மேலான ராணுவ வீரர்களை நான் என்றும் வணங்குபவன் அவர்களின் தியாகத்தை வணங்குபவன் . என்னுடைய செய்தியாளர் சந்திப்பில் தி.மு.க.வின் பேரணி குறித்து கேட்டபோது அது நாடகம் அவர்கள் மத்திய அரசையும் பாராட்டாமல் நாடகம் போடுகிறார்கள் என்று சொல்லியதை தி.மு.க தொலைக்காட்சிகள் என்னுடைய பேச்சை திரித்து போட்டுவிட்டார்கள்.

நான் என்னுடய X வலைதளத்தில் உடனடியாக மறுத்து பதில் போட்டுள்ளேன் ஆனாலும் இராணுவ வீரர்களின் மனம் காயப்பட்டு இருக்கு மேயானால் அதற்காக அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்னுடைய குடும்பம் முன்னால் இன்னால் இராணுவ வீரர்களின் குடும்பம் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.