உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள சிராவஸ்தி பகுதியில் சைபுதீன் (31)- சபீனா (24) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இந்த வாரத்தின் தொடக்கத்தில் லக்னோவுக்கு செல்வதாக குடும்பத்தினரிடம் சொல்லிவிட்டு வீட்டிலிருந்து சென்றனர். ஆனால் அன்றைய தினமே அதே பகுதியில் சைபுதீன் நடந்து சென்றுள்ளார். இதனை சபீனாவின் சகோதரர்
சலாவுதீன் பார்த்த நிலையில் அவர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக தன் சகோதரிக்கு தொடர்பு கொண்டார். ஆனால் அவரது செல்போன் ஸ்விச் ஆப் என இருந்தது.
இதனால் சலாவுதீன் சந்தேகத்தினால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் சைபுதீனை அழைத்து விசாரணை நடத்தினர். அவரை 2 நாட்களாக போலீசார் காவலில் எடுத்து விசாரித்த நிலையில் பின்னர் நடந்த அனைத்து விவரங்களையும் போலீசாரிடம் கூறினார். அதாவது அவர் தன் மனைவியை கொடூரமாக கொலை செய்து பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டி அந்த பகுதியில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் வீசியதாக கூறியுள்ளார்.
அதோடு தன் மனைவியின் கைகளை தோட்டத்தில் தீ வைத்து எரித்து அழித்ததாகவும் கூறியுள்ளார். இது பற்றி சபீனாவின் குடும்பத்தினர் கூறும் போது வரதட்சணை கேட்டு அடிக்கடி எங்கள் வீட்டு பெண்ணை அவர்கள் துன்புறுத்திய நிலையில் தற்போது கொலை செய்துவிட்டனர் என்று கூறியுள்ளனர். மேலும் சைபுதீனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.