“திருமணமாகாத வாலிபருடன் உல்லாசமாக இருந்த 3 குழந்தைகளின் தாய்”… கள்ளக்காதலை வைத்து ரூ.5 லட்சம் பணம் கேட்டு மிரட்டல்… அடுத்து நடந்த கொடூரம்…!!!!
SeithiSolai Tamil May 18, 2025 03:48 PM

கர்நாடக மாநிலத்தில் உள்ள சுரனகி கிராமத்தில் ஒரு பெண் பிணமாக கிடந்த நிலையில் இதை பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் பெண்ணின் சடலத்தை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் உயிரிழந்தது லட்சுமி என்ற 33 வயது பெண் என்று தெரியவந்தது. இவருக்கு திருமணம் ஆன நிலையில் 3 குழந்தைகள் இருக்கிறார்கள். இவர் கணவனை பிரிந்து தட்சின கனடா மாவட்டத்திலுள்ள ஒரு பகுதியில் கூலி வேலை செய்து வந்துள்ளார்.

இவருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திய போது சுனில் என்ற 30 வயது வாலிபர் லட்சுமியுடன் கள்ள உறவிலிருந்து தெரியவந்தது. இவரைப் பிடித்து விசாரித்ததில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்தது. அதாவது சுனில் திருமணமான லட்சுமியுடன் கள்ள உறவில் இருந்த நிலையில் அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதில் இன்னும் சுனிலுக்கு திருமணமாகாத நிலையில் பெற்றோர் அவருக்கு பெண் பார்த்துள்ளனர். இதை அறிந்த லட்சுமி தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சுனிலை வற்புறுத்தியுள்ளார்.

ஒருவேளை திருமணம் செய்து கொள்ளா விடில் தனக்கு 5 லட்ச ரூபாய் பணம் வேண்டும் எனவும் இல்லை எனில் கள்ள உறவை உன் குடும்பத்தினரிடம் சொல்லி விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதனால் சுனில் தன் நண்பர்கள் ஆன ரமேஷ், நாகராஜ், சித்தப்பா ஆகியோர்களுடன் சேர்ந்து லட்சுமியை காரில் திட்டமிட்டு அழைத்து சென்ற பின்னர் ஒரு வயரை வைத்து அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து சடலத்தை வீசி சென்றது தெரிய வந்தது. மேலும் இவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்துள்ள நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.