அரக்கோணம் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் பொறுப்பிலிருந்து தெய்வச்செயல் நீக்கப்பட்டுள்ளார். கல்லூரி மாணவியின் புகாரைத் தொடர்ந்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இந்த நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்நிலையில் தெய்வசெயலுக்கு பதிலாக கவியரசு என்பவர் அரக்கோணம் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் மத்திய ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் தெய்வா (எ) தெய்வச்செயல் (த/பெ ரத்தினம் 150/1, 172, பெரிய தெரு, காயலூர் குடியிருப்பு (அ) அரக்கோணம்), அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக, ம. கவியரசு (த/பெ மனுவேல் 190, சி.எஸ்.ஐ. பள்ளிக்கூடத் தெரு. காவலூர். அரக்கோணம்) என்பவர், அந்தப் பொறுப்பில் நியமிக்கப்படுகிறார்.
எற்கனவே நியமிக்கப்பட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் அனைவரும் இவருடன் இணைந்து கழகப் பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாருக்கு முன்னதாக 20க்கும் மேற்பட்ட இளம்பெண்களை வலையில் வீழ்த்தி, பாலியல் ரீதியாக அவர்களை வீடியோ எடுத்து துன்புறுத்தி வருவதாக கல்லூரி மாணவி ஒருவர் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.