இன்றைய ஐபிஎல் 2025 தொடரின் 62வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. சென்னை அணி பேட்டிங்கில், டெவன் கான்வே மற்றும் ஊர்வில் பட்டேல் இருவரும் விரைவில் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் களமிறங்கிய ஆயுஷ் மாத்ரே 43 ரன்கள் குவித்தார். அடுத்து வந்த டெவால்ட் ப்ரெவிஸ் வேகமாக விளையாடி 42 ரன்கள் சேர்த்தார். இறுதிகட்டத்தில் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி கட்டுப்படுத்தினர். 20 ஓவர்களில் சென்னை அணி 8 விக்கெட்டுகள் இழந்து 187 ரன்கள் எடுத்தது.
188 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது. துவக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடி 36 ரன்கள் எடுத்தார். அதன்பின், கேப்டன் சஞ்சு சாம்சன் நிதானமாக 41 ரன்கள், இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி 57 ரன்கள் எடுத்தனர்.இந்த இருவரும் ஒரே ஓவரில் ஆஷ்வின் வீசிய பந்துகளில் அவுட்டாகி வெளியேறினர். பின்னர் வந்த ஜுரேல் 12 பந்துகளில் 31 ரன்கள் குவித்து ராஜஸ்தான் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.17.1 ஓவரில் ராஜஸ்தான் அணி ந4 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் சேர்த்து அபார வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் சென்னை அணி கடைசி இடத்திலேயே தொடர்கிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னை அணி தனது கடைசியில் லீக் ஆட்டத்தை குஜராத்துக்கு எதிராக விளையாடுகிறது.