“2026 சட்டசபை தேர்தல்”… தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும்…? பிரேமலதா விஜயகாந்த் அதிரடி..!!
SeithiSolai Tamil May 23, 2025 01:48 PM

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜய்காந்த் நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, கட்சியின் வளர்ச்சி பணியில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி கடலூரில் மாபெரும் மாநாடு நடத்த உள்ளோம். அப்போது உறுதியாக தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கிறது. எத்தனை தொகுதிகள்? வேட்பாளர்கள் யார்? என்பதை எல்லாம் அறிவிப்போம். அதற்கு முன்னதாக 234 தொகுதிக்கும் தொகுதி வேட்பாளர்களை அறிவித்து அதற்கான பணிகளை அடுத்த வாரத்தில் தொடங்க உள்ளோம்.

அதன் பிறகு தமிழகம் முழுவதும் நானும் விஜயபிரபாகரனும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை நேரடியாக சந்தித்து பேச உள்ளோம். தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் மிக மோசமாக இருக்கிறது. பொள்ளாச்சி வழக்கில் தற்போது தான் மிகப்பெரிய தீர்ப்பு கிடைத்துள்ளது. பெண்களை தவறாக பயன்படுத்தும் நிலை நிச்சயமாக மாற வேண்டும் இது போன்ற சம்பவங்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். மக்கள் பணத்தை ஊழல் செய்து யாரும் தப்பித்து விட முடியாது என்று கூறினார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.