பெரும் பரபரப்பு... அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு கொலை மிரட்டல்!
Dinamaalai May 23, 2025 10:48 PM

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.  கோவையில் உள்ள எஸ்.பி வேலுமணிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக அதிமுக சார்பில் காவல்துறைக்கு பாதுகாப்பு வேண்டி மனு கொடுக்கப்பட்டுள்ளது.

ஜூலை 30ம் தேதிக்குள் கோவையில் வெடிகுண்டு வைத்து வேலுமணியை கொலை செய்ய திட்டமிட்டு இருப்பதாக அவருக்கு கடிதம் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் கருப்பு பணம் வைத்துள்ளதற்கான ஆதாரம் இருப்பதாகவும் மே 25ம் தேதிக்குள் ஒரு கோடி ரூபாய் தரவேண்டும் எனவும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து போலீசிடம் கூறினால் 3 மாதங்களில் குடும்பத்தில் 3 பேரை கொலை செய்து விடுவோம் எனவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.  தற்போது போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.