சல்மான் கான் வீட்டிற்குள் நுழைய முயற்சி... இளம்பெண்ணுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் !
Dinamaalai May 23, 2025 10:48 PM

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான். இவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையின் பாந்த்ரா பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.  இவருக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல் விடுத்து வருகிறது. 2024ல் ஏப்ரல் 14ம் தேதி சல்மான் கான் வீடு அருகே துப்பாக்கி சூடு தாக்குதல் நடைபெற்றது.  இதன்பிறகு  சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. 

இந்நிலையில்  பாந்திராவில் உள்ள நடிகர் சல்மான் கான் வீட்டிற்குள் மே 20ம் தேதி அதிகாலை இளம்பெண் அத்துமீறி நுழைய முயற்சித்துள்ளார்.  இதையடுத்து, அத்துமீறி நுழைய முயன்ற இஷா சாம்ரா என்ற பெண்ணை கைது செய்து போலீசார்  அவரை சிறையில் அடைத்துள்ளனர்.  

இந்நிலையில், கைது செய்யப்பட்ட இஷா இன்று நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு இஷா சாம்ராவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  கைது செய்யப்பட்ட இஷா சாம்ரா என்ற பெண்ணிடம் மும்பை காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.