டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் 37 வயதான இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதாக இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் அறிவித்துள்ளார். ஜூன் 17ம் தேதி தொடங்கும் வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுகிறார். இலங்கை அணி நிர்வாகம் விரும்பும் பட்சத்தில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடத் தயார் எனவும் விளக்கம் அளித்துள்ளார்.
ஜூன் 17ம் தேதி தொடங்கும் வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி காலேயில் நடைபெறவுள்ளது. இந்த டெஸ்ட் போட்டி மேத்யூஸின் 119வது டெஸ்ட் போட்டியாகும். இதில் 34 போட்டிகளில் அவர் கேப்டனாக விளையாடியுள்ளார். அதே மைதானத்தில் தான் ஜூலை 2009 இல் தனது டெஸ்ட் போட்டியை தொடங்கினார் இலங்கை அணியின் மூத்த ஆல்ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூஸ்.