என் வீட்டின் கதவை உடைத்து ரூ.25 லட்சம் திருடிவிட்டார்.. சக வீராங்கனை மீது தீப்தி ஷர்மா புகார்.!
Tamil Minutes May 24, 2025 01:48 AM

இந்தியா ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா, யுபி வாரியர்ஸ் அணியினர் அருஷி கோயல் மீது ரூ.25 லட்சம் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா, யுபி வாரியர்ஸ் அணியின் வீராங்கனை அருஷி கோயல் மீது ரூ.25 லட்சம் மோசடி செய்ததாக புகார் கொடுத்துள்ளார். தீப்தியின் சகோதரர் சுமித் ஷர்மாவும் அருஷி தங்களது வீட்டின் கதவை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி மற்றும் வெளிநாட்டு நாணயங்களை திருடியதாக புகார் செய்துள்ளார். இதையடுத்து, உதவி காவல் கண்காணிப்பாளர் சுகன்யா ஷர்மா இந்த வழக்கை உறுதிப்படுத்தி, அருஷிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தீப்தியின் சகோதரர் சுமித் ஷர்மா சதார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆரம்ப பரிசோதனையில், புகாரில் சில உண்மைகள் உள்ளன என்று கண்டுபிடித்து,4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தோம்,” என்று காவல்துறை அதிகாரி கூறினார்.

தீப்தி, அருஷி ஆகிய இரு கிரிக்கெட் வீராங்கனைகள் பல ஆண்டுகளாக ஒரே அணியில் சேர்ந்துகொண்டு நெருங்கிய உறவு வளர்த்துக்கொண்டிருந்தனர். பின்னர், அருஷி மற்றும் அவரது பெற்றோர்கள் தீப்தியிடம் பணம் பெற்றதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.

தீப்தியின் சகோதரர் தமது புகாரில் மேலும் கூறியதாவது: “என் அக்கா கடந்த இரண்டு வருடங்களில் ரூ.25 லட்சத்திற்கும் மேல் நஷ்டம் பெற்றார். அருஷியை நேருக்கு நேர் சந்தித்தபோது, அவர் அந்த பணத்தை திருப்பி தர மறுத்தார். மேலும், அருஷி தீப்தியின் வீட்டில் உள்ள லாக்கரை உடைத்து திருடியதாகவும் தெரிவித்தார்.

தீப்தி தற்போது பெங்களூருவில் உள்ளார், அங்குள்ள அணிக்கு தயாராகும் நிலையில் இந்த சம்பவம் அவருக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

தீப்தி தற்போது தனது பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக பெங்களூருவில் உள்ள பயிற்சி முகாமுக்குத் தயாராகி கொண்டிருப்பதால், இந்த சம்பவம் அவருக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது,” என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, தீப்தி மற்றும் அருஷி ஒரே மாநில அணியில் விளையாடுகின்றனர். இவ்வாறு இருக்கும் நிலையில் அருஷி மீது தீப்தி தரப்பு தெரிவித்துள்ள குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.