“ஏதோ சாதித்த மாதிரி இருக்கு…” நிகழ்ச்சிக்கு வந்த பிறகு என் மகள்….! உருக்கமாக பேசிய தேவயாணி-ராஜகுமாரன் தம்பதி…. வைரலாகும் வீடியோ….!!
SeithiSolai Tamil August 03, 2025 02:48 AM

சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சியில் நடிகை தேவயாணியின் மகள் இனியா போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இந்த வாரம் நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. சரிகமப நிகழ்ச்சியில் தேவயானியும் அவரது கணவர் ராஜகுமாரனும் பங்கேற்றார்.

மேடையில் பேசிய ராஜகுமாரன் எனது மகள் இனியா இந்த நிகழ்ச்சியில் வந்து நிற்கின்ற போது தான் ஏதோ சாதித்த எண்ணம் வருகிறது. என் மகள் இந்த நிலைமைக்கு வந்ததற்கு காரணம் நான் இல்லை. தேவயாணியின் உழைப்புதான் அதற்கு காரணம் என கூறினார். பின்னர் மேடைக்கு வந்த தேவயானி கூறியதாவது, என்னுடைய அம்மா எனக்காக எல்லாம் பண்ணாங்க.

 

View this post on Instagram

 

A post shared by zeetamil (@zeetamizh)

அதே போல நானும் என் குழந்தைகளுக்கு பண்ண வேண்டும் என்று விரும்புகிறேன். இனியா என் பக்கம் ரொம்ப வரமாட்டா. ஆனா இந்த நிகழ்ச்சியின் மூலமாக இப்போ என் மகள் என் கூட ரொம்ப அட்டாச் ஆகிட்டா என உருக்கமாக பேசினார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.