முதலாம் ஆண்டு பொறியியல் வகுப்புகள் தொடங்குவது எப்போது? அண்ணா பல்கலை அறிவிப்பு..!
WEBDUNIA TAMIL August 03, 2025 02:48 PM

அண்ணா பல்கலைக்கழகம், பொறியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும் தேதியை அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள வளாக கல்லூரிகளில், பி.இ. மற்றும் பி.டெக். படிப்புகளுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 11-ஆம் தேதி தொடங்கும். அதற்கு முன்னதாக, ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 9 வரை அறிமுக வகுப்புகள் நடைபெறும்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பிற தனியார் பொறியியல் கல்லூரிகளில், முதலாமாண்டு வகுப்புகள் ஆகஸ்ட் 18-ஆம் தேதி தொடங்கும்.

முதல் செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் 16-ஆம் தேதி தொடங்கும். இந்த தேர்வுகள் முடிந்த பிறகு, அடுத்த செமஸ்டர் வகுப்புகள் ஜனவரி 5-ஆம் தேதி முதல் தொடங்கும்.

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 23-ஆம் தேதி நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.