தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் ஆகஸ்ட் மாதத்தில் 7 நாட்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையான மளிகைப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை முன்கூட்டியே திட்டமிட்டு வாங்குமாறு அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, மாதாந்திர விடுமுறையாக ஆகஸ்ட் 1 (வெள்ளிக்கிழமை), ஆக. 8 (வெள்ளிக்கிழமை), ஆக. 17 (ஞாயிற்றுக்கிழமை), ஆக. 24 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நான்கு நாட்களில் ரேஷன் கடைகள் இயங்காது. இதற்குப் பிறகும், சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 (வெள்ளி), கோகுலாஷ்டமி ஆகஸ்ட் 16 (சனி) மற்றும் விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் 27 (புதன்) ஆகிய நாட்களில் அரசு விடுமுறை என்பதால் ரேஷன் கடைகள் மூடப்பட்டிருக்கும். எனவே, இந்த மாதத்தில் மொத்தமாக 7 நாட்கள் ரேஷன் கடைகள் இயங்காது என்பதை பொதுமக்கள் கவனத்தில் கொண்டு, தேவையான பொருட்களை முன்பே வாங்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.