பாஜக கூட்டணியிலிருந்து விலகிய ஓபிஎஸ், தொடர்ந்து பல விமர்சனங்களை வைத்து வரும் நிலையில் பாஜக அமைதி காத்து வருகிறது.
கடந்த நாடாளுமன்ற தேர்தல் முதலாக பாஜக கூட்டணியில் இருந்து வந்த ஓ.பன்னீர்செல்வம், சமீபத்தில் பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க 6 முறைக்கு மேல் அனுமதி கேட்டும் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை என்றும் அதனால் அப்செட்டான ஓபிஎஸ் இந்த முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சமீபமாக மத்திய அரசு, பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் குறித்து ஓபிஎஸ் வைத்து வரும் விமர்சனங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் நயினார் நாகேந்திரன் “முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் என்னைப் பற்றி குறை சொன்னாலும் அவரை பற்றி நான் குறை சொல்ல மாட்டேன். முதல்வரை சந்திப்பதற்கு முதல் நாள் கூட நான் ஓபிஎஸ்ஸை தொடர்பு கொண்டேன். அவர் எனக்கு கடிதம் அனுப்பியதாக கூறுகிறான். ஆனால் எனக்கும் இன்னும் எந்த கடிதமும் வரவில்லை” எனக் கூறியுள்ளார்.
ஓபிஎஸ் - நயினார் நாகேந்திரன் இடையே எழுந்துள்ள இந்த முரண்பாடு குறித்து பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன் “நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குறை சொல்வதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். ஓபிஎஸ் இன்னும் நிதானமாக தனது அரசியல் நகர்வுகளை செய்திருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
Edit by Prasanth.K