பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் எழுதியதாக ஓ.பன்னீர்செல்வம் (OPS) கூறிய நிலையில், அதனை நயினார் நாகேந்திரன் முழுமையாக மறுத்துள்ளார். “OPS 6 முறை எனது அலுவலகத்தை தொடர்புகொண்டதாக கூறுகிறார். ஆனால் அந்த தொடர்பு எதுவும் ஏற்பட்டதில்லை. மேலும் அவர் சொல்வது போல எந்தக் கடிதமும் எனக்கு இதுவரை கிடைக்கவில்லை” என நயினார் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், “இனிமேலும் உண்மையை பேசுங்கள்” என OPS வலியுறுத்திய நிலையில், நயினார் தரப்பில் நேரடி பதிலடி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அரசியல் வட்டாரத்தில் “யார் சொல்வது உண்மை?” என்ற விவாதம் தீவிரம் பெறத் தொடங்கியுள்ளது.