சென்னை தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு... முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!
Dinamaalai August 22, 2025 05:48 PM

 


 இன்று சென்னை மாநகருக்கு 386வது பிறந்தநாள்.  வந்தாரை வாழ வைக்கும் சென்னை என்கிற மெட்ராஸ் மாநகரை சிறப்பிக்கும் வகையில்  ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22 அன்று சென்னை  நிறுவன நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.  1639  ஆகஸ்ட் 22 ம் தேதி  ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி சென்னைப் பகுதியில் ஒரு வர்த்தக மையத்தை நிறுவியது, இது சென்னையின் தொடக்கமாகக் கருதப்படுகிறது.

இந்நாளில், சென்னையின் பாரம்பரியம், கலாசாரம், மற்றும் வரலாற்றைப் போற்றும் வகையில் பல நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், நடைபயணங்கள், மற்றும் கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. இந்நாளை நினைவு கூறும் வகையில், ”சென்னை வெறும் ஊரல்ல, தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு, வணக்கம் வாழவைக்கும் சென்னை” என தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.  


இது குறித்து  அவரது பதிவில், ”எந்தெந்த மூலைகளில் இருந்தோ நண்பர்களை அளித்து, வாழ வழிதேடுவோருக்கு நம்பிக்கையை அளித்து, பல பெண்களுக்குப் பறக்கச் சிறகுகளை அளித்து, எத்தனையோ பேருக்கு முதல் சம்பளத்தை அளித்து, சொந்த ஊரில் அடையாளத்தை அளித்து, மொத்தத்தில் நமக்கெல்லாம் வாழ்வளித்த சீரிளம் சென்னைக்கு அகவை 386. சென்னை வெறும் ஊரல்ல,  தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு! வணக்கம் வாழவைக்கும்” என பதிவிட்டுள்ளார்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.