திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் உள்ள கப்பல் கட்டும் நிறுவனத்தில் பணியாற்றிய வடமாநில புலம்பெயர் தொழிலாளி ஒருவர் பணிக்கிடையே உயிரிழந்ததை அடுத்து, அவரது மரணத்திற்கு நிவாரணம் வழங்கக்கோரி சுமார் 1,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நேரத்தில், போலீசார் பேச்சுவார்த்தை நடத்த முயன்றபோது, எதிர்பாராத விதமாக போராட்டம் கலவரமாக மாறி, வடமாநில தொழிலாளர்கள் காவல்துறையினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் சில காவலர்கள் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவம் தொடர்பாக 6 முக்கிய பிரிவுகளில் வடமாநில தொழிலாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் திடீரென களத்தில் இறங்கி கட்டுப்பாடுகளை மேற்கொண்டு சூழலை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
“>