அகில இந்திய பேச்சு மற்றும் கேட்டல் நிறுவனம் (AIISH) வைர விழா நிகழ்வில் பங்கேற்க இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு நேற்று மைசூருவுக்கு வந்தார்.
மைசூரு விமான நிலையத்தில் இறங்கிய அவரை கர்நாடக ஆளுநர் தவார்சந்த் கெலாட் மற்றும் முதலமைச்சர் சித்தராமையா உள்பட பலர் வரவேற்றனர். பின்னர் AIISH வைர விழா மேடையில் உரையாற்றிய சித்தராமையா, ஜனாதிபதி முர்முவை நோக்கி “உங்களுக்கு கன்னடம் தெரியுமா?” என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி முர்மு, தனது உரையில் கூறியதாவது:“கன்னடம் எனது தாய்மொழி இல்லை என்றாலும், நமது நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் அனைத்து மொழிகளையும் நான் மதிக்கிறேன்.
எல்லோரும் தங்கள் தாய்மொழியை உயிர்ப்புடன் காக்க வேண்டும். அதுவே கலாச்சாரமும் பாரம்பரியமும் பாதுகாக்கும் வழி.நானும் இனி சிறிது சிறிதாக கன்னடம் கற்க முயற்சி செய்வேன்,” என தெரிவித்தார்.
கர்நாடகாவில் வாழும் அனைவரும் கன்னடத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் முதல்வர் சித்தராமையாவின் கருத்துக்கு ஜனாதிபதி முர்முவின் இந்த பதில், நிகழ்வில் கலந்துகொண்டவர்களின் பாராட்டைப் பெற்றது.