ஸ்மார்ட் வாட்ச்சிற்கு பதிலாக ஸ்மார்ட் பேண்டை தேர்வு செய்யும் பிரபலங்கள் – காரணம் என்ன தெரியுமா?
TV9 Tamil News September 11, 2025 08:48 AM

ஒரு காலத்தில் மணி பார்ப்பதற்காக மட்டுமே இருந்த வாட்ச், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஸ்மார்ட் வாட்ச்சாக (Smart Watch) இதய துடிப்பு, இரத்த அழுத்தம் உள்ளிட்ட நம் உடல் நலனை கவனிக்கும் கருவியாக மாறியிருக்கிறது. தற்போது இந்த ஸ்மார்ட் வாட்ச் ஒரு படி மேலே போய் ஸ்மார்ட் பேண்டாக மாறியிருக்கிறது. தற்போது பிரபலங்கள் பலரும் ஸ்மார்ட் பேண்டை தான் அணிகிறார்கள். இதில் ஸ்கிரீன் இருப்பதில்லை. குறிப்பாக கடந்த ஒரு வருடமாக பிரபலங்கள் பலரும் ஸ்மார்ட் பேண்ட் பிரபலமாகியிருக்கிறது. டிஸ்பிளே இல்லாத இந்த வகை ஸ்மார்ட் பாண்டை ஏன் பிரபலங்கள் தேர்வு செய்கிறார்கள் என கேள்வி எழுகிறது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

பிரபலங்கள் ஏன் இதனைத் தேர்வு செய்கிறார்கள் ?
  • டிஸ்பிளே இல்லாததால் தூக்கத்தின் போதும் சிரமம் இன்றி அணியலாம். எடை குறைவு என்பதால் நாள் முழுவதும் எளிதாக அணியலாம்.
  • சாதாரண பேண்ட் போல தெரிவதால் அது ஸ்மார்ட் பேண்ட் என வெளியே தெரியாது. பிரபலங்களுக்கு இது பிரைவசியை வழங்குகின்றன.
  • ஸ்மார்ட்வாட்ச் அடிக்கடி நோட்டிஃபிகேஷன் வராது. பின்னணியில் ஹெல்த் டேட்டாவை பதிவு செய்வதால்,  இது பிரபலங்களுக்கு தொல்லையாக இருக்காது.
  • தூக்கம், இதய துடிப்பு, மூச்சு பழக்கம் போன்றவற்றை துல்லியமாக பதிவு செய்கிறது.

இதையும் படிக்க : அதிரடியாக களமிறங்க உள்ள ஆப்பிள் ஐபோன் 17 ஏர்.. அட இத்தனை சிறப்பு அம்சங்களா?

 டிஸ்பிளே இல்லாத எளிய வடிவமைப்பு

மென்மையான துணி போன்ற ஸ்டிராப் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இது வாட்ச் போல கைக்கு சிரமத்தை அளிக்காது. மேலும் இதன் உள்ளே ஸ்மார்ட் பாடை தனியாக பிரித்தெடுக்கலாம். சிறிய சார்ஜிங் டாக் மூலம் எளிதில் சார்ஜ் செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. வெல்கரோ முறையில் கைகளில் சுலபமாக அணிய முடியும்.

டிஸ்பிளே இல்லாததால் ஆப் மூலம் எளிமையாக கண்காணிக்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் நமது தூக்கத்தின் தன்மை, இதய துடிப்பு போன்ற விரிவான டேட்டாவை வழங்குகிறது.  இதில் கொடுக்கப்பட்டுள்ள Aura Tab மூலம் தூக்க நேரம், பழக்கங்கள், தினசரி ஓய்வு நேரம் போன்றவற்றை கண்காணிக்க முடியும்.

தொடர்ந்து ஸ்மார்ட் அணிபவர்களுக்கு கையில் உறுத்தல் தோன்றும். ஆனால் இந்த ஸ்மார்ட் பேண்ட் அணிவதற்கு மிகவும் இலகுவாக இருக்கும். குறிப்பாக தூங்கும்போது கூட தொந்தரவு இல்லாமல் இதனை அணியலாம். வியர்வை, ஈரப்பதம் போன்றவற்றால் தொந்தரவு இதில் இருப்பதில்லை.

இதையும் படிக்க : வெறும் 15 விநாடிகளில் ஆபத்தான இதய நோய்களைக் கண்டறியும் ஏஐ ஸ்டெதஸ்கோப் – எப்படி செயல்படுகிறது?

உடற்பயிற்சி மற்றும் ஹார்ட்ரேட் கண்காணிப்பு

நாள் முழுவதும் நாம் நடக்கும் ஸ்டெப்ஸ் மற்றும் இதய துடிப்பில் மாறுபாடு போன்றவற்றை தானாக பதிவு செய்யும். நம் உடற்பயிற்சி செய்யும் போது நம் உடல் நிலையில் ஏற்படும் மாறுபாடுகளை கண்காணிக்கும். இதன் மூலம் நம் உடல்நிலையை துல்லியமாக கண்காணிக்க முடியும். ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் மருத்துவர்களை அணியலாம்.

இதில் மிகவும் முக்கிய அம்சமாக கருதப்படுவது தூக்கத்தை கண்காணிக்கும் டேட்டா. இதன் மூலம் எவ்வளவு நேரம் தூங்கினோம், தூக்கம் நன்றாக இருந்ததா என்பதையும் நமக்கு காட்டுகிறது. BioCharge Score மூலம் உடல் ஓய்வை அளவிடுகிறது. குறிப்பாக தூக்கத்தின் போது மூச்சு விடும் திறன் குறைவாக இருந்தால் இதன் மூலம் கண்டறியும். இதன் மூலம் ஸ்லீப் அப்னீயா உள்ளவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.