கன்னியாகுமரியில் படகு சேவை தற்காலிக ரத்து... சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!
Dinamaalai September 11, 2025 08:48 AM

 

கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடி பாலத்திற்கான படகு சேவை ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அங்குள்ள விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலையினை இணைக்கும் வகையில் ரூ.37 கோடி மதிப்பில் கண்ணாடி இழை பாலம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டது.

இதை கடந்த டிசம்பர் 30-ந்தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். தொடர்ந்து கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள், திருவள்ளுவர் சிலையினை கண்டுகளிப்பதோடு, கண்ணாடி இழை பாலம் வாயிலாக நடந்து சென்று கடலின் அழகினை கண்டு மகிழ்ச்சி அடைகின்றனர். மேலும் சுற்றுலா படகில் சவாரி செய்து மகிழ்கின்றனர்.

இந்த நிலையில், கன்னியாகுமரியில் சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடி பாலத்திற்கான படகு சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். கடலின் நிலையற்ற தன்மை காரணமாக சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.