2025 ஆகஸ்ட் மாதத்துடன் அன்புமணியின் பதவிக்காலம் முடிந்துவிட்டது என பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி , “பாமகவின் தலைவர் பதவியில் அன்புமணி தற்போது கிடையாது. 2025 மே மாதத்துடன் அன்புமணியின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. ராமதாஸ்க்கு தெரியாமல் கட்சி அலுவலகத்தின் முகவரியை மாற்றி சூழ்ச்ச் செய்யப்பட்டுள்ளது. திட்டமிட்டு சூழலை திசைதிருப்பில், மோசடி செய்துள்ளனர். கட்சியின் நிரந்தர முகவரியை மாற்றி, சூழ்ச்சியுடன் ஏமாற்று வேலையில் ஈடுபட்டுள்ளனர். அன்புமணியால் பாமக பொதுக்குழுவை கூட்ட முடியாது. தலைவர் பதவியில் இல்லாதவர் எப்படி பாமக பொதுக்குழுவை கூட்ட முடியும். ஆகவே மாமல்லபுரத்தில் அன்புமணியால் கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லாது. பாமகவின் நிர்வாகக் குழு கூடி அதன் தலைவராக ராமதாசையே தேர்வு செய்துள்ளது. பாமக நிறுவனர், தலைவர் ராமதாஸ் மட்டும்தான். இதுவே இறுதி முடிவு. மாம்பழம் சின்னம் எங்களுக்கு தான் எனக் கூறுவது மோசடிதான்.
ராமதாஸ் இல்லாமல் எதுவும் இல்லை. அவரை எந்த வகையிலும் இழிவுப்படுத்துவதை ஏற்க முடியாது. பாமகவின் புதிய தலைவராக தான் தேர்வானதை ஏற்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். விரைவில் அங்கீகாரம் கிடைக்கும்” என்றார்.