இன்று பிரதமர் மோடியின் 75வது பிறந்த நாள்.. தூய்மை பணியாளர்களின் குடும்பங்கள் கெளரவிப்பு!
Dinamaalai September 17, 2025 05:48 PM

இன்று பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. குஜராத்தின் சூரத் நகரில் மத்திய அமைச்சர்  சி.ஆர். பாட்டீல் பேசும்போது, பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வெவ்வேறு வகையான சேவை பணிகள் தொடங்கி வைக்கப்படும். 

அக்டோபர் 2ம் தேதி காந்தியின் பிறந்த தினமும், செப்டம்பர் 25ல் தீனதயாளின் பிறந்த தினமும் வருகிறது. இந்த காலகட்டத்தில், கட்சியால் குஜராத்திலும் மற்றும் நாடு முழுவதும் பல்வேறு வகையான திட்டங்கள் நடத்தப்படும். 

இந்தியாவில் தூய்மையான நகராக முதன்முறையாக சூரத் நகரம் விருது பெற்றுள்ளது. இதற்காக, எங்களை வழிநடத்தியதற்காக பிரதமர் மோடிக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். அவருடைய பிறந்தநாளான செப்டம்பர் 17ம் தேதி சூரத் நகரில் இந்த முறை, நகரிலுள்ள 6000  தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் திட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனைத்து தூய்மை பணியாளர்களின் குடும்பத்தினருக்கும் அழைப்பு விடப்பட்டு உள்ளது எனக் கூறியுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.