இந்தியாவின் மலிவு விலை 7-சீட்டர் டீசல் எஸ்யூவிகள் – விலை குறைந்த டீசல் SUV பேமிலி கார்கள்!
Seithipunal Tamil September 21, 2025 12:48 AM

இந்தியாவில் டீசல் எஸ்யூவிகளுக்கு எப்போதுமே தனி வரவேற்பு உண்டு. காரணம்? அதிக டார்க், சக்திவாய்ந்த பவர், மேலும் எரிபொருள் சிக்கனம். குறிப்பாக 7-சீட்டர் எஸ்யூவிகள் குடும்பத்துடன் நீண்ட பயணங்களுக்கு மிகச் சிறந்த தேர்வு. மஹிந்திரா, டாடா போன்ற நிறுவனங்கள் இந்த பிரிவில் வலுவாக நிலை கொண்டுள்ளன.

இப்போது நாட்டில் கிடைக்கும் மிகவும் மலிவு விலையில் உள்ள 5 முக்கியமான 7-சீட்டர் டீசல் எஸ்யூவிகளைப் பார்ப்போம்.

1. மஹிந்திரா பொலிரோவிலை: ₹9.28 லட்சம்

1.5 லிட்டர் mHawk டீசல் இன்ஜின்

75 bhp பவர், 210 Nm டார்க்

மைலேஜ்: ~16 kmpl

எளிமையான ஆனால் வலிமையான வடிவமைப்பு

குறைந்த பராமரிப்பு செலவு, ஆஃப்-ரோடு சவால்களுக்கு ஏற்றது.

 2. மஹிந்திரா பொலிரோ நியோவிலை: ₹9.43 லட்சம்

1.5 லிட்டர் டீசல் இன்ஜின்

100 bhp பவர், 260 Nm டார்க்

மைலேஜ்: ~17 kmpl

ஸ்டைலான வடிவமைப்பு, LED tail lamps, touchscreen infotainment, ரியர் கேமரா.

7 சீட்டர் அமைப்பு, மூன்றாம் வரிசை குழந்தைகள்/குறுகிய பயணங்களுக்கு ஏற்றது.

3. மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக்விலை: ₹13.03 லட்சம்

2.2 லிட்டர் டீசல் இன்ஜின்

130 bhp பவர், 300 Nm டார்க்

மைலேஜ்: ~15 kmpl

ரஃப்ஃப்-அண்ட்-டஃப் SUV தோற்றம், வலுவான சஸ்பென்ஷன்.

4. மஹிந்திரா ஸ்கார்பியோ Nவிலை: ₹13.61 லட்சம்

2.2 லிட்டர் டீசல் இன்ஜின்

200 bhp பவர், மைலேஜ்: ~14.5 kmpl

பிரீமியம் SUV – பனோரமிக் sunroof, வென்டிலேட்டட் seats, ADAS, 4x4 ஆஃப்ஷன்.

 5. டாடா சஃபாரிவிலை: ₹14.66 லட்சம்

2.0 லிட்டர் Kryotec டீசல் இன்ஜின்

170 bhp பவர், 350 Nm டார்க்

மைலேஜ்: ~16.3 kmpl

6 மற்றும் 7 சீட்டர் விருப்பங்கள்

12.3” டச்ஸ்கிரீன், பனோரமிக் sunroof, விசாலமான third row.

 6. மஹிந்திரா XUV700விலை: ₹14.18 லட்சம்

2.2 லிட்டர் டீசல் இன்ஜின்

200 bhp பவர், மைலேஜ்: ~17 kmpl

Level-2 ADAS, 360° கேமரா, 10.25” டச்ஸ்கிரீன், AWD ஆப்ஷன்.

சொகுசு + தொழில்நுட்ப அம்சங்களுக்கு முன்னுரிமை தருபவர்களுக்கு.

₹10 லட்சத்திற்குள் மலிவு விலையில் தொடங்கி, ₹15 லட்சம் வரையிலான இந்த 7-சீட்டர் டீசல் எஸ்யூவிகள், குடும்பத்திற்கும், நீண்ட பயணத்திற்கும், சக்திவாய்ந்த டார்க் தேடுபவர்களுக்கும் சிறந்த தேர்வு. மஹிந்திரா பொலிரோ ரஃப்ஃப் அண்ட் டஃப் பயன்பாட்டிற்கு ஏற்றது, அதே சமயம் XUV700 மற்றும் டாடா சஃபாரி சொகுசு மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்கின்றன.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.