குற்றாலம் கல்லூரியில் ஆயுர்வேத கருத்தரங்கு மற்றும் கண்காட்சி! Dhinasari Tamil %name%
தென்காசி மாவட்டம் குற்றாலம் பராசக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி வளாகத்தில் வைத்து பத்தாவது தேசிய ஆயுர்வேத மருத்துவ தினத்தை முன்னிட்டு ஜிக்ஞாசா தெற்கு தமிழ்நாடு சார்பில் கருத்தரங்கு மாநாடு நடைபெற்றது.
பராசக்தி கல்லுாரி விலங்கியல் துறை சார்பில் நடத்தப்பட்ட விழாவிற்கு கல்லுாரி முதல்வா் அமிர்தவல்லி தலைமை தாங்கினார். கோவை தி ஆரிய வைத்திய பார்மசி என்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் தேவிதாஸ்வாரியர் முன்னிலை வகித்தார். விலங்கியல் துறை தலைவர் வசந்தி அனைவரையும் வரவேற்று பேசினார். செல்வி கவிமணி இறைவணக்கம் பாடினார்.
கோவை தி ஆரிய வைத்திய பார்மசி என்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் திரு தேவிதாஸ் வாரியர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து விழாவை துவக்கி வைத்தார். விழாவில் வல்லுனர்கள் பங்கேற்ற கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் துறையை சார்ந்த சிறந்த ஆயுர்வேத மருத்துவ வல்லுநர்கள் பங்கேற்ற கருத்தரங்கம் .’விவேகா ‘என்று பெயரிடப்பட்டிருந்த ‘ஆயுர் எக்ஸ்போ’என்ற கண்காட்சி நடைபெற்றது.
இந்த கண்காட்சியில் 200க்கும் அதிகமான மூலிகை தாவரங்கள் மற்றும் 300க்கும் அதிகமான மூலிகை கச்சா பொருட்கள் பல்வேறு விதமான சிறுதானியங்கள் அவற்றின் உபயோகக் குறிப்புகள் பாரம்பரிய அரிசி வகைகள் தானிய வகைகள் அறுவை சிகிச்சை எந்திரங்களின் மாதிரிகள் ‘ரசசாலா‘ என்று சொல்லப்படக்கூடிய பண்டைய வேதியியல் ஆய்வு உபகரணங்கள் மாதிரியாக வைக்கப்பட்டிருந்தது.
கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட மூலிகை தொடர்பான விளக்கப் படங்கள் மிகவும் நேர்த்தியாக பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
மேலும் இந்த கண்காட்சிக்கு முத்தாய்ப்பாக நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழிலும் வடமொழியிலும் வெளியிடப்பட்ட மிகவும் தொன்மையான மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பல நூல்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன பொதுமக்கள் பயன்பெறும் பொருட்டு ஆயுர்வேதம் தொடர்பான விளக்க செய்திகள் அடங்கிய துண்டு பிரசுரங்களும் சிறு சிறு நூல்களும் விநியோகிக்கப்பட்டன.
தென் தமிழகத்தைச் சார்ந்த ஆயுர்வேத மருத்துவத்துறையில் சிறந்து விளங்கும் பல்வேறு நிபுணர்களின், பல்வேறு ஆய்வு நூல்களில் பதிவு ஏற்றம் செய்யப்பட்டதுமான நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன .
மேலும் இந்த கண்காட்சியின் ஒரு பகுதியாக குற்றாலம் பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையின் பகுதிகளில் கிடைக்க பெறும் அரிய மூலிகைகளும் அன்றாடம் நாம் பயன்படுத்தக்கூடிய பல்வேறு நோய்களுக்கான மூலிகைகளும் கச்சா பொருட்களும் மிகவும் அழகாக இடம் பெற்றிருந்தன . முக்கியப் பகுதியாக ‘விவேகா ‘என்ற ‘வெப்சைட் ‘ஒன்று பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது .
இந்த வெப்சைட்டில் பல்வேறு விதமான மூலிகைகளை பற்றிய தரவுகளும் மேலும் ஆயுர்வேத மருத்துவ நிபுணர்களின் ஆய்வுக் கட்டுரைகளும் நூற்றுக்கணக்கான தொன்மையான ஆயுர்வேத மருத்துவ நூல்களும், மூலிகை செடிகள் பற்றிய விளக்க பக்கங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தன.
முன்னதாக விழாவினை சிறப்பு விருந்தினராக பங்கேற்று துவங்கி வைத்தார்கள் கல்லூரியின் முதல்வரும் விலங்கியல் துறையின் துறையின் தலைவரும் ஒருங்கிணைப்பாளரும் பிற விரைவுரையாளர்களும் வல்லுநர்களும் பங்கேற்று சிறப்பித்தனர்.
இந்த விழாவை ஒட்டி விவேகா 2025 என்ற சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மாணவர்களும் இமானுவேல் அரசர் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மாணவர்களும் மரியா ஆயுர்வேத கல்லூரி மாற்றும் மாணவர்களும் ஈரோடு நந்தா கல்லூரி மாணவர்களும் பெருந்திரளாக பங்கேற்று விழாவினை சிறப்பித்தனர்.
விழா ஏற்பாடுகளை செங்கோட்டை ஆயுர்வேத மருத்துவர் ஹரிஹரன் ஒருங்கிணைத்திருந்தார். இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் பங்கேற்ற ஆய்வு கட்டுரை மற்றும் ஆய்வு விளக்க போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழும் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது. முடிவில் நவீன் நன்றி உரையாற்றினார்.
குற்றாலம் கல்லூரியில் ஆயுர்வேத கருத்தரங்கு மற்றும் கண்காட்சி! News First Appeared in Dhinasari Tamil