Sai Pallavi: நடிகை சாய் பல்லவி எப்போதுமே ஹோம்லி லுக்கில்தான் இருப்பார் எனக் கூறப்பட்டு வந்த நிலையில் திடீரென அவர் உடைத்திருக்கும் விஷயங்களால் ரசிகர்களே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விஜய் தொலைக்காட்சியின் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சிக்குள் வந்தவர் சாய் பல்லவி. நிகழ்ச்சியில் தோல்வியை தழுவினாலும் அவருக்கு தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்தது. வெவ்வேறு தொலைக்காட்சியின் டான்ஸ் நிகழ்ச்சிக்கும் சென்றார்.
அப்போது அல்போன்ஸ் புத்திரன் மூலம் பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்தார். எந்தவித மேக்கப்பும் இல்லாமல் சாதாரண புடவையில் சாய் பல்லவி பலரின் மனதை கொள்ளை அடித்தார். மலையாள திரையுலகை மட்டுமல்லாது தெலுங்கிலும் சிறப்பான நடிகையாக வலம் வந்தார்.
தமிழில் நடித்து வந்தாலும் அவருக்கு தொடர் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த வருடம் வெளியான அமரன் சாய் பல்லவியின் கேரியரையே உச்சம் அடைய செய்தது. சிவகார்த்திகேயனை விட அமரன் படத்தின் ஸ்ட்ராங் பில்லராக இருந்தவர் சாய் பல்லவி.
இப்படி ஒருபுறமிருக்க சாய் பல்லவி படிப்பிலும் கெட்டி. அவர் ஒரு டாக்டர் என்பதும் பலருக்கு தெரியும். இதனாலே என்னவோ ஒரு சுடிதாரில் சாய் பல்லவியை பார்த்தது இல்லை. எப்போதுமே ஒரு புடவையுடன் எளிய மேக்கப்புடன் வலம் வருவார்.
இந்நிலையில் அதிர்ச்சி தரும் விதமாக தன்னுடைய குடும்பத்துடன் சுற்றுலா சென்று இருக்கும் சாய் பல்லவி பிகினி உடையில் வலம் வந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தன் தங்கை பூஜாவுடன் அவர் பிகினி படங்களும் கசிந்து வருகிறது.
கோலிவுட்டில் ஒரு ஹிட் படம் கொடுத்துவிட்டாலும் அடுத்தடுத்த வாய்ப்புகள் இன்னும் அவருக்கு வரவில்லை. இதனால் தாராளம் காட்டலாம் என்ற ரீதியில் இந்த புகைப்படங்களை அம்மணி தரப்பே கசிய விட்டதா என்ற சந்தேகமும் எழுந்து இருக்கிறது.