ஜிஎஸ்டி சீர்திருத்தம் செய்த வேலை.. முதல் நாளே டிவி, ஏசிக்களை வாங்கி குவித்த பொதுமக்கள்..!
Webdunia Tamil September 24, 2025 01:48 PM

ஜிஎஸ்டி வரி விகிதங்களில் மத்திய அரசு கொண்டுவந்த சமீபத்திய மாற்றங்கள், ஏசி மற்றும் தொலைக்காட்சி விற்பனையில் உடனடி விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. வரி சீரமைப்பு அமலுக்கு வந்த முதல் நாளான நேற்று இந்த சாதனங்களின் விற்பனை பல மடங்கு உயர்ந்துள்ளது.

சமீபத்திய அறிவிப்பின்படி, ஏசி மற்றும் தொலைக்காட்சிகள் மீதான 28% ஜிஎஸ்டி வரி 18% ஆக குறைக்கப்பட்டது. மேலும், சில பொருட்களின் 12% ஜிஎஸ்டி வரியும் 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி மாற்றம் நுகர்வோர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனையாளர்கள் கூறுகையில், வரி குறைப்பிற்கு பிறகு, ஏசி விற்பனை ஒரே நாளில் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இந்த ஜிஎஸ்டி குறைப்பு, நவராத்திரி போன்ற வரவிருக்கும் பண்டிகை கால விற்பனைக்கு ஒரு நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது. இது வாடிக்கையாளர்களின் வாங்கும் திறனை அதிகரித்து, பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் என விற்பனையாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

இந்த வரி குறைப்பின் பலன்கள் படிப்படியாக நுகர்வோரை சென்றடையும் என்றும், பண்டிகை காலங்களில் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.