பொள்ளாச்சி அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த மூன்று மாணவிகள், சாணிப் பவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தகவலறிந்த மாணவிகளின் பெற்றோர்களும், உறவினர்களும் மருத்துவமனையில் திரண்டு சென்று ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி அடுத்த கஞ்சம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் இன்று காலை பள்ளிக்கு சென்ற மாணவிகள் 3 பேரை ஆசிரியர்கள் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மாணவிகள் 3 பேரும் சாணி பவுடர் கரைசலை குடித்து உள்ளனர்.
சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளி மயக்கமுற்றுள்ளனர். பதறிய ஆசிரியர்கள் கஞ்சம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலமாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு வந்த ஆசிரியர்களிடம் மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாணவிகள் ஏதாவது தவறு செய்தால் எங்களுக்கு தகவல் அளித்தால் நாங்கள் அவர்களை கண்டிப்போம் ஆனால் நீங்கள் திட்டினீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?