கடனை திரும்ப செலுத்த நிதி திரட்டும் அதானி எண்டர்பிரைசஸ்.... ரூ.1,000 கோடி திரட்ட முடிவு....
ET Tamil October 08, 2025 05:48 PM
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் கடனை திரும்ப செலுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமையான இன்று மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் (NCD) மூலம் ரூ.1,000 கோடி திரட்ட உள்ளதாக தெரிவித்துள்ளது.



இதில் ICICI புருடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் ரூ.300 கோடி ஒதுக்கீட்டை எடுத்துள்ளது. இந்த NCD கடன் பத்திரங்களுக்கு 8.7% வட்டி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடன் பத்திரங்கள் மூலம் திரட்டப்படும் நிதியை வைத்து ஏற்கனவே உள்ள கடனை திரும்ப செலுத்தவும், துணை நிறுவனங்களுக்கு நிதி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதுமட்டும் இல்லாமல் நிறுவனத்தின் பொதுவான செலவுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.



அதானியின் கடன் பத்திரங்களுக்கு AA ரேட்டிங்கை Icra நிறுவனம் வழங்கியுள்ளது. இதுமட்டும் இல்லாமல் கடன் பத்திரங்கள் நிலையானவை என்றும் மதிப்பிடப்பட்டுள்ளன. NCDகள் சுமார் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை கால அவகாசம் கொண்டவை. அடிப்படை வெளியீட்டு அளவு ரூ.1,000 கோடியாக இருந்தது. இதில் கிரீன்-ஷூ ஆப்ஷன் இல்லை.



அதானி எண்டர்பிரைசஸின் ரூ. 5,000 கோடிக்கு மேல் கடன் திருப்பிச் செலுத்தும் திட்டம் உள்ளது. 2026ம் நிதியாண்டில் திட்டமிடப்பட்டுள்ளன. இதில் முதல் பாதியில் சுமார் ரூ.3,300 கோடி புல்லட் திருப்பிச் செலுத்துதல் அடங்கும். செயல்பாட்டு பணப்புழக்கங்கள் மற்றும் சரியான நேரத்தில் மறுநிதியளிப்பு ஆகியவற்றின் மூலம் இந்தக் கடமைகளை நிறைவேற்ற நிறுவனம் போதுமான அளவில் உள்ளது என்று இக்ரா தெரிவித்துள்ளது.



நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான அதானி குழுமம் தொடர்ந்து தங்களின் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது கடன் பத்திரங்கள் மூலமாக நிதி திரட்டுகிறது. இதன் மூலமாக நிறுவனத்தின் செயல்படுகள் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனத்தின் இந்த நடவடிக்கையால் பங்கு விலை இனி வரும் நாட்களில் உயரும் என கூறப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.