தீபாவளி பண்டிகை இன்னும் 13 நாட்களில் வர உள்ள நிலையில், தங்கத்தின் விலை எந்த உச்சத்தை தொடுமோ! என்ற அச்ச உணர்வு பொதுமக்களின் மனதில் குடிகொண்டிருக்கிறது. தங்கத்தின் விலை உயர்வு என்பது ஏழை எளிய மக்களுக்கு இனி தங்கம் எட்டாக்கனியாகிவிடும் என்ற எண்ணத்தில் பொதுமக்கள் விழிபிதுங்கி தவித்து வருகின்றனர். ஆனால், தங்கத்தின் விலையோ எதைப்பற்றியும் கவலையின்றி புதிய புதிய உச்சங்களை தொட்டவண்ணம் உயர்ந்து கொண்டே போகிறது.
சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்ந்து ரூ.90 ஆயிரத்து 400-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11,300-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் தங்கம் விலை இன்று 2-வது முறையாக விலை உயர்ந்துள்ளது. ஒரு சவரன் விலை காலையில் ரூ.800 உயர்ந்த நிலையில் தற்போது மேலும் ரூ.680 உயர்ந்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 680 உயர்ந்து ரூ.91 ஆயிரத்து 080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.11 ஆயிரத்து 385-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல், 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,425க்கும், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.75,400க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்கு ரூ.3 உயர்ந்து கிராம் 170 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,70,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது