ஒரு சவரன் தங்கம் ரூ.91 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம்..!
Newstm Tamil October 09, 2025 06:48 PM

தங்கம் விலை நேற்று (அக் 08) காலை கிராமுக்கு 100 ரூபாய் உயர்ந்து, 11,300 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 800 ரூபாய் அதிகரித்து, 90,400 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. நேற்று மதியம், மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து, 11,385 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 680 ரூபாய் அதிகரித்து, எப்போதும் இல்லாத வகையில் 91,080 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து, 170 ரூபாய்க்கு விற்பனையானது.

இந்நிலையில் இன்று (அக் 09) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ஒரு சவரன் ரூ.91,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,400க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.91 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் தொட்டுள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.171க்கு விற்பனை செய்யப்படுகிறது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.